சென்னை விமான நிலையத்தில் இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கான தேர்வை மறைமுகமாக நடத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எதுவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதா எனக் கேட்டதற்கு, ' இதுவரை அப்படி எதுவும் மேற்கொள்ளவில்லை, அப்படி செய்தால் உங்களிடம் தெரிவிப்பேன்' என்று கூறினார்.
மேலும் ரஜினி,கமல் இணைவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ' அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களால் ஆனத் தலைவர்கள்.
இந்த ஆட்சியும் அவ்வாறே உருவாக்கப்பட்டு மக்களாட்சி தத்துவத்தின்படி நடைபெறுகிறது. எனவே, அதிமுகவின் அடித்தளம் மிகவும் பலமாக இருப்பதால், யார் ஒன்றிணைந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை' என்றார்.
இதையும் படிங்க:ஓடுபாதையில் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு - உயிர்தப்பிய 277 பேர்!