ETV Bharat / state

நகர் ஊரமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தரவு

சென்னை: நகர் ஊரமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Deputy Chief Minister said that projects implemented under the Urban Planning Scheme should be completed expeditiously

author img

By

Published : Aug 17, 2020, 4:28 PM IST

சென்னை பெருநகர வளர்ச்சி கழக அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நகர் ஊரமைப்பு துறை மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டடங்களுக்கு வழங்கப்படவேண்டிய அனுமதிகள், நிலங்களை வகைப்படுத்துதல், கண்காணித்தல், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கிராமப்புற பகுதிகளில் இரண்டு மாடி கட்டடங்களை கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளே அனுமதிகளை வழங்கிவருவது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்டட அனுமதிகளுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும். நிலங்களை வகைப்படுத்துதல் சரிவர மேற்கொள்ள வேண்டும் .

விண்ணப்பதாரரின் பணிகளை விரைந்து முடிக்க ஒரு முறை மட்டுமே தகவல்களை கேட்டு பெற வேண்டும். தேவையேற்பட்டால் மட்டும் இ-மெயில் மூலம் தகவல்களை பெற்றுகொள்ளுமாறு துணை முதலமைச்சர், மாவட்ட அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வீட்டுவசதி வாரிய செயலாளர் ராஜேஷ் லக்கானி, வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர், நகர் ஊரமைப்பு பொறுப்பு இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.