சென்னை அரசு அருங்காட்சியகத்திற்குத் தமிழ்நாடு அரசு திட்டக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் சென்று, TANII நிதித் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில் அருங்காட்சியகத்தின் செயல்பாடு மற்றும் TANII நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றுவரும் TANII நிதி உதவி திட்டங்களைப் பார்வையிட்டுப் பணிகளை விரைவில் முடித்திடவும் அருங்காட்சியகத் திட்டங்களைப் பொதுமக்களுக்குப் பெருமளவில் பயன்படும் வகையில் கொண்டுசெல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி: விவசாயிகள் வேதனை!