ETV Bharat / state

"பயணிகளிடம் அலட்சியமாக நடக்கக்கூடாது” - அரசு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

தேவையில்லாத வார்த்தை, தவறான பேச்சு, கைகலப்பு போன்றவற்றை தவிர்த்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்து பயணிகளிடம் கணிவோடு நடந்துகொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

Department of Transport  Transport  driver and conductor  unnecessary words  driver  conductor  ஓட்டுநர்  நடத்துநர்  ஓட்டுநர் நடத்துநருக்கு அறிவுரை  போக்குவரத்துதுறை  போக்குவரத்துதுறை அறிவுரை  கைகலப்பு  பேருந்து பயணி  பேருந்து
போக்குவரத்துதுறை
author img

By

Published : Nov 16, 2022, 11:31 AM IST

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின் போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாற்று வழியில் பேருந்தை இயக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று, இறக்கி செல்ல வேண்டும். நடு வழியில் இறக்கிவிட கூடாது. நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயண சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும்.

பேருந்துகளில் உள்ள பழுதுகளை இரவில் முறையாக சரி செய்து வழித்தடத்தில் கால அட்டவணையின் படி பேருந்துகளை முறையாக மக்கள் பயண்பாட்டிற்காக இயக்கிட வேண்டுமெனவும், பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்க வேண்டும்.

இவை அனைத்தும், தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பை ஏற்படுவதை தவிர்க்க இந்த அறிவுரைகள் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து இயக்கத்தை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயண சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாய் என பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுபியுள்ளார்.

இதையும் படிங்க: அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை! உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.