ETV Bharat / state

'கரோனா பரிசோதனைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணம்' - மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு - Department of Public Welfare

சென்னை: கரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு
மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு
author img

By

Published : Jun 7, 2020, 2:31 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், "கோவிட்-19 ஆர்டிபிசிஆர் பரிசோதனையை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மேற்கொண்டால் 2500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுடையவரின் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்தால் கூடுதலாக 500 ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுடையவர்கள் நேரடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு வந்தால் 3 ஆயிரம் கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும் நோயாளியின் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்தால் 500 ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்" என நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க; உடல் வெப்பநிலை 37°C-க்கு மேல் இருந்தால் பொதுத்தேர்வு எழுத முடியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.