இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், 2021-2022 ஆம் நிதியாண்டில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வரை மட்டும் ரூ. 9 ஆயிரம் கோடியை கடந்துள்ளது.
மேலும், பதிவுத்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்பு முயற்சிகளின் பயனாக நடப்பு ஆண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி வருவாய் இலக்காக அடையப்படும். இலக்கினை அடைய அனைத்து உதவி பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் ஆகியோர் அரசின் வருவாயை பெருக்க முழு கவனம் செலுத்த வேண்டும்.
2020 - 2021 ஆம் நிதியாண்டின் டிசம்பரில் ரூ.7,030.59 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. அதனை விட நடப்பு ஆண்டில் ஈட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.1,969.77 கோடி அதிகமாகும்.
அரசின் வருவாயை மேலும் பெருக்கும் வகையில் ஆவண சொத்துக்களின் மதிப்பை உறுதி செய்தல், ஆவணங்களை பதிவு செய்து உடனடியாக விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் முதலான யுக்திகளைக் கையாள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அவங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' - தயாரிப்பாளர் ஆதம் பாவா