சென்னையில் தியாகராஜ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பிரபல அசைவ உணவகமான தம்பி விலாஸ், சென்னையை சுற்றி ஆறு கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றது. கிண்டியில் உள்ள தம்பி விலாஸ் கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத உணவக நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக ஓட்டல் ஊழியர் கணேஷ் கூறும்போது, "கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கபடவில்லை. தற்போது வரை ஓட்டல் திறக்கபடவில்லை. பாக்கி ஊதியத்தை வழங்க நிர்வாகம் மறுக்கிறது. எங்களின் அசல் சான்றிதழ்களைத் திரும்ப தர நிர்வாகம் மறுக்கிறது. இதன் காரணமாக வேறு வேலைக்கு செல்லமுடியாமல் மிகுந்த சிரம்மத்திற்க்குள்ளாகி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சதுரகிரிக்கு செல்ல அனுமதி' - ஆனால் இவ்ளோ கட்டுப்பாடுகள்