ETV Bharat / state

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் முக்கியமான 2 மேம்பாலங்களை இடிக்க திட்டம் எனத் தகவல் - Phase II Metro Rail project in Chennai

Chennai Metro: சென்னையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்காக, சென்னை நகரத்துக்குள் இருக்கும் இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:29 PM IST

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது. இதைத் தொடர்ந்து,சென்னையில் மெட்ரோ ரயில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சென்னையில், பல்வேறு இடங்ளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், சுரங்கம் தோண்டும் பணிகளும், சென்னையில் இருந்து புறநகருக்கு செல்லும் வழியில், உயர்மட்ட பாதையானது, தற்போது அமைக்கபட்டு வருகிறது. அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது.

3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது நடைபெற்று வருகிறது. தற்போது, சுரங்கம் பணிகள் வேகமக நடைபெற்று வருகிறது. கலங்கரை - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்தமாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும் விரைவில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை பகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலங்கள் இடிப்பா?: மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்தில் 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் என வருகின்றன. அதில் சுரங்கபாதை ஆனது நகரின் முக்கிய பகுதிகளிலும், அடையாறு, கூவம் ஆறு என இரண்டு ஆறுகளின் அடிகளிலும் வருகின்றன.

இதற்காக அடையாறு அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணிக்காக அடையாறு சந்திப்பு பாலம் ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலம் என இரண்டு மேம்பாலம் இடிக்கபடும் எனவும், போக்குவரத்து பாதிக்காத வகையில், தற்போதுள்ள பாலத்தை ஒட்டி புதிய இருவழி மேம்பாலம் கட்டப்படும்.

இந்த இருவழிப்பாதை மேம்பாலம் கட்டி முடித்ததும், தற்போது இருக்கும் பாலம் இடிக்கப்படும் எனவும் மெட்ரோ பணி முடிவடைந்தவுடன், அடையாறு மேம்பாலம் 2027-ம் ஆண்டு அக்டோபரிலும், ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் 2028 மார்ச் மாதத்திலும் மீண்டும் கட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி.. யார் இந்த கருக்கா வினோத்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.