ETV Bharat / state

மருத்துவப் படிப்பில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

author img

By

Published : Oct 19, 2022, 3:55 PM IST

மருத்துவப் படிப்பில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கோரிக்கை

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் நடப்பாண்டில் மாணவர்களில் சிறப்பு பிரிவினர்களான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நாளை (அக். 20) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில், 10 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் உள்ள நிலையில், 50 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு பிரிவில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், ஒரு பிடிஎஸ் இடத்திற்கு 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில், எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 9 இடங்களும் உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாகவே 47 பேர் மட்டுமே தகுதி பெற்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 11 பேருக்கும் கலந்தாய்வில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் ராணுவத்தினரின் மகள் பாலினிஸ்ரீ கூறும்போது, "முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு ஒதுக்கீட்டில் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டேன். நீட் தேர்வில் 570 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனாலும் இடம் கிடைக்கவில்லை. காத்திருப்பு பட்டியிலில் வைத்துள்ளேன். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தர்மபுரியை சேர்ந்த சினேகா கூறும்போது, "எனது தந்தை ராணுவத்தில் நிலை 4 இல் பணிபுரிந்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் பணியில் இருந்து ஒய்வு பெற்று, வீட்டில் உள்ளார். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான தரவரிசை பட்டியலில் 16 ஆவது இடத்தில் உள்ளேன். ஆனால் எம்பிபிஸ் படிப்பில் 10 பேருக்கும், பிடிஎஸ் படிப்பில் ஒருவருக்கும் என இடம் ஒதுக்கப்பட்டதால், தனக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைக்கவில்லை.

நாட்டிற்காக உழைக்கும் வீரர்களின் வாரிசுகளுக்கான ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டதே தொடர்கிறது. மருத்துவக் கல்லூரிக்கு ஒன்று வீதம் ஒதுக்கீடு செய்தால் கூட சுமார் 40 இடம் கிடைக்கும். கடந்தாண்டே இந்த கோரிக்கை எழுப்பப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" என கூறினார்.

முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு யோகேஸ்வரி கூறும்போது, "மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 5 லட்ச ரூபாய் கூடுதல் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.