நிவர் புயல் காரணமாக நேற்று (நவ. 25) பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சிக்குள்பட்ட தேனுகாம்பாள் நகர், முதல் தெருவில் நிவர் புயலின் காரணமாக மரங்கள் சாலையில் சாய்ந்துள்ளன.
மரங்கள் சாய்ந்து, நீண்ட நேரமாகியும் தற்போதுவரை அவை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதையொட்டி சாய்ந்த மரங்களை உடனே மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் மரங்கள் விழுந்து 7 கார்கள், 2 ஆட்டோக்கள் சேதம் - காவல் துறை