ETV Bharat / state

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு; தவறான தகவல் அளித்தால் குற்றவியல் நடவடிக்கை! - தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பு

சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு தவறான தகவல் அளித்தால் மாணவர்கள், பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

dee application, false details, criminal-action
author img

By

Published : Jun 11, 2019, 10:38 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் 1,050 இடங்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் என மொத்தம் 1,830 இடங்கள் உள்ளன.

இங்கு சேர்வதற்கு 12ஆம் வகுப்பில் பொதுப்பிரிவினர் 50 விழுக்காடு மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்கள் 11, 12ஆம் வகுப்பினை ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டும்.

இகற்கான விண்ணப்பங்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான அழைப்புக் கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதன் பின்னர் மாணவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உண்மை சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்ந்து கொள்ளலாம். அப்போது விண்ணப்பதாரர்கள் சான்றிதழில் உள்ள உண்மையான விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

பின்னர் அவை சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அனுப்பப்படும். பின்னர் உண்மைத் தன்மையில் குறைகள் கண்டறியப்பட்டால் , பட்டயப்படிப்புக் காலத்தின் எந்த நிலையிலும் விண்ணப்பதாரரின் சேர்க்கை தடை செய்யப்படும். மேலும் விண்ணப்பதாரர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் உண்மையை மறைத்து பொய்யான தகவல் வழங்கியதற்காக அவர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர 
 தவறான தகவல் அளித்தால் குற்றவியல் நடவடிக்கை

சென்னை, 

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு   தவறான தகவல்  அளித்தால்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 12  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு 24 ம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1050 இடங்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் என 1830 இடங்கள் உள்ளன. 
இந்த இடங்களில் 12 ம் வகுப்பினை முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பொதுப்பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 45 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்கள் 11,12ம் வகுப்பினை ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டும். 
விண்ணப்பங்களை www.tnscert.org   என்ற இணையதள முகவரியில் 24 ந் தேதி   மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் மாணவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உண்மை சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்ந்துக் கொள்ளலாம். 
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு  முடித்தால் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழில் உள்ள உண்மையாக விபரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மையில் குறைகள் கண்டறியப்பட்டால் , பட்டயப்படிப்புக் காலத்தின் எந்த நிலையிலும் விண்ணப்பதாரரின் சேர்க்கை தடை செய்யப்படும். விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உண்மையை மறைத்து பொய்யான தகவல் வழங்கியதற்காக அவர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் 25 அரசு உதவிப்பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2150 இடங்கள், 211சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 9800 இடங்களில் மாணவர்கள் 10 ந் தேதி முதல் 24 ந் தேதி வரையில் நேரில் சென்று தங்களை சேர்த்துக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.