கரோனா வைரஸ் நோய் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் மேலும் மூவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "லண்டனிலிருந்து சென்னைக்குத் திரும்பிய 25 வயதுடைய இளைஞருக்கு கரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதேபோல், லண்டனிலிருந்து திருப்பூருக்குத் திரும்பிய 48 வயது நபர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாவது நபர் மதுரை ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார்.