ETV Bharat / state

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்புக்கு பணிச்சுமை காரணமல்ல - டீன் தேரணி ராஜன் விளக்கம்.. - Course of surgery

Dr. Maruthupandian Death: 36 மணி நேரம் பணியிலிருந்ததால் சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்ட மேற்படிப்பு மாணவர் மருது பாண்டியன் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

Dean explained that workload is not the cause of chennai medical college student death
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் மரணத்திற்கு பணிச்சுமை காரணமல்ல என டீன் விளக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:55 PM IST

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்டமேற்படிப்பு மாணவர் மருதுபாண்டியன் இறந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், 36 மணி நேரம் பணியில் இருந்ததால் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “மருத்துவர் மருது பாண்டியன் (30), சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவையியல் பட்டமேற்படிப்பு (M.S. 2019 - 2022) படித்தார். அதில் தேர்ச்சி பெற்ற பின், சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே பொது அறுவையியல் துறையில் உதவி அறுவை சிகிச்சைப் பேராசிரியராக (21.6.2022 முதல் 27.11.2022) பணியாற்றினார்.

பின்னர், உயர் சிறப்பு அறுவையியல் படிப்புகளுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 27.11.2023 அன்று சென்னை மருத்துவக் கல்லூாயில், குடல் - இரைப்பை அறுவை சிகிச்சைத் துறையில், M.ch (எம்.சி.ஹெச்) உயர் பட்டப் படிப்பு மாணவராகச் சேர்ந்தார். துறைக்குப் புதிய மாணவரானதால், துறையின் வழக்கப்படி துறை சார்ந்த பணிகள் பற்றி அறிமுகம் ஆவதற்காக, மருத்துவர் மருது பாண்டியன் ஒரு பார்வையாளராகத் தான் நடத்தப்பட்டார்.

இதனிடையே, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8.12.2023 அன்று மூளைச் சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல், ஒரு கல்லீரல் செயலிழப்பு நோயாளிக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்படும் முறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், மருத்துவர் மருது பாண்டியன் தானாகவே அறுவை அரங்கத்திற்கு வந்து அறுவை சிகிச்சைப் பார்வையாளராக இருந்தார்.

எனவே அறுவை சிகிச்சையிலோ, சிகிச்சைக்குப் பின் நோயாளியின் கண்காணிப்பிலோ, அவருக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவரது அகால மரணம் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறப்பிற்கான காரணம் முறையான உறுப்புப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் தான் தெரியவரும்.

பணிச் சுமையால் அவர் இறந்து விட்டார் என்ற கருத்தும், தொடர்ந்து 36 மணிநேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை உறுதியாகக் கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக சமத்துவ மருத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “மருதுபாண்டியன் என்ற 30 வயதேயான இளம் மருத்துவர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறையில், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், அதனுடன் இணைந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் பயின்று வந்தார்.

24 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியாக அவர் பணி‌புரிந்துள்ளார். பிறகு, அவரது அறையில் அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி உள்ளது. சமூக அக்கறை உள்ள மருத்துவர் அவர். அவரது மரணம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

கடும் பணிச்சுமையால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும், கடும் பணிச்சுமை அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பதை நேர்மையான, வெளிப்படையான விசாரணை மூலம், உடற்கூராய்வு செய்து கண்டறிய வேண்டும்.

மருத்துவர் மருதுபாண்டியன் மரணத்திற்குக் காரணமான காரணிகள் குறித்து ஆராய, ஓர் நடுநிலையான நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்திட வேண்டும். மருதுபாண்டியன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் அறுவை சிகச்சைச்துறை உதவி பேராசிரியரும், தற்போதய சிறப்பு முதுநிலை மருத்துவ மாணவரும், மக்கள் பணியில் மிகுந்த அக்கறை கொண்டவருமான எமது சக தோழர் மருத்துவர் மருதுபாண்டியன் அவரின் திடீர் மறைவு, அனைவரையும் கடும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அன்னாரின் இழப்பால் வாடும் அவரது மனைவி, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழந்த இரங்கலை Tamilnadu Govt Doctors Association - TNGDA தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக, தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் மறைவிற்கான உண்மை காரணம் விளங்கவில்லை. தகுந்த விசாரணை கண்டு உண்மையை அறிய வேண்டுகிறோம்” என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: தயாராகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..! 100 பேருந்துகள் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.