கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதலே, விதிகளை மீறி பயணிப்பவர்களின்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
![ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7272170_a.jpg)
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 56 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 98 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 118 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு, 6 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 244 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் குறித்த புள்ளி விவரம்