சென்னை: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி டானியாவிற்கு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறுமியை இன்று (செப்டம்பர் 2) நேரில் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிட் கேட்டறிந்தார்.
சிறுமிக்கு ஒட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தொடை பகுதியில் இருந்து சதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைந்து உடன் சிறுமி இயல்பு நிலைக்கு திரும்புவார். என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு சிறுமியின் முகம் 4 முதல் 5 மாதங்களில் சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு செல்லும்... ஈபிஎஸ் பொதுச்செயலாளராக செயல்படலாம்... உயர் நீதிமன்றம் அதிரடி...