இது குறித்து அவர் அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "தமிழ்நாட்டில் பால் வணிகம், விநியோகத்தில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பணியாற்றிவருகின்றனர்.
இயற்கைப் பேரிடர்கள், அரசியல் கட்சிகளின் கடையடைப்பு போராட்டங்களின்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பால் விநியோகம் தங்குதடையின்றி கிடைப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம்.
தற்போதும் உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பால் முகவர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்துவரும் தங்களுக்கு, தமிழ்நாடு அரசு இதுவரை எவ்வித அங்கீகாரமும் அளிக்கவில்லை என்பது தங்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.
எனவே, தங்களை அங்கீகரிக்கும்விதமாக, மருத்துவம், காவல் துறையினருக்கு அடுத்தப்படியாக, தங்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ, விபத்து காப்பீடுகள் வழங்கி தமிழ்நாடு அரசு பாதுகாத்திடவேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - ஆவின்