தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், ஆவின் பால் விலையை குறைத்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது,
"தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ள முதலமைச்சருக்குத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆவின் பால் விற்பனை குறைப்பு மூலம் தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை குறைக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என முதலைச்சரிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.