கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி என்னும் வி.கே.தஹில் ரமணி பணி புரிந்து வருகிறார்.
மேகாலய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டலை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து வி.கே.தஹில் ரமணியை மேகலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யவும் உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் பணியிடமாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே பணியை தொடரக்கோரியும் தஹில் ரமணி சார்பில் கொலிஜியம் குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு தஹில் ரமணியின் கோரிக்கையை கொலிஜியம் குழு மறுத்து விட்டது.
இதனால் தனது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வி.கே.தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.