ETV Bharat / state

சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! - சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் ஜெயக்குமார்

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவின் பரப்புரை படம் எனவும், இப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

D Jayakumar slams director Pa Ranjith
சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
author img

By

Published : Jul 24, 2021, 2:35 PM IST

Updated : Jul 24, 2021, 3:16 PM IST

சென்னை: இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால், 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

திமுக பிரச்சாரப் படம்

அண்மையில் வெளியாகிய சார்பட்டா படத்தில் எம்ஜிஆருக்கும், விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம்வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் என ஒவ்வொரு படத்திலும் தன்னை விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்தி கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் அவர்தான்.

முகமது அலிக்கு மீன் குழம்பு

1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதற்காக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து அவருக்கு மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்துச் சண்டை மீது காதல் கொண்டிருந்தார் அவர்.

D Jayakumar slams director Pa Ranjith
முகமது அலியுடன் எம்ஜிஆர்

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எஜிஆர், முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்கச் செய்து அழகு பார்த்தார். ஆனால், சார்பட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமரசம் செய்வது கலைஞனுக்கு அழகல்ல

கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே, அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாதவரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகார மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர்க்கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

எம்ஜிஆர் தனது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Exclusive Interview: சார்பட்டா கதை கேட்டதுமே ஷூட்டிங் போக துடிச்சேன் - நடிகர் ஆர்யா

Last Updated : Jul 24, 2021, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.