ETV Bharat / state

7ஆவது முறையாக சுசீந்திரன் - D இமான் கூட்டணி! - மே மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

இசையமைப்பளர் டி. இமானின் பிறந்தநாளில் அவருடன் 7ஆவது முறையாக இணைவதாக இயக்குநர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 25, 2022, 4:07 PM IST

Updated : Jan 25, 2022, 7:42 PM IST

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் ஆகியோர் 7ஆவது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D. இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7ஆவது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:வலிமை அப்டேட்: ரிலீஸுக்கு இரண்டு தேதிகள் ரிசர்வ்

Last Updated : Jan 25, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.