ETV Bharat / state

புரெவி புயல் எதிரொலி - தென் தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை - cyclone burevi

புரெவி புயல் எதிரொலியாக, தென் தமிழ்நாடு, தென் கேரள கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி  புயல் எச்சரிக்கை
புரெவி புயல் எச்சரிக்கை
author img

By

Published : Dec 3, 2020, 7:54 PM IST

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், தற்போது 16 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு மிக அருகே 70 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 230 கி.மீ தொலைவிலும் இப்புயல் நிலைக்கொண்டுள்ளது. காற்றின் வேகம் 70-80 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசி வருகிறது.

மேற்கு-தென்மேற்கு திசையில் பாம்பனை நோக்கி நகர்ந்து வரும் புரெவி புயல் இன்று (டிசம்பர் 3) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையை கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் தமிழ்நாட்டின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் வடப்பகுதிகள், புதுச்சேரி, மஹி, காரைக்கால், தென் கேரளா ஆகிய பகுதகளில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் மேற்கு வங்கக் கடல் பகுதி, தென் தமிழ்நாடு- கேரளா கடற்பகுதிகளுக்கு இன்று முதல் நாளை மறுநாள் (டிசம்பர் 5) வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.