ETV Bharat / state

இலங்கை அருகே கரையை கடக்கும் புரெவி புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள பரெவி புயல் இன்று (டிசம்பர் 2) மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone update by Indian metro logical department

author img

By

Published : Dec 2, 2020, 6:27 PM IST

தென் மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

மேற்கு - வட மேற்கு திசையை நோக்கி சுமார் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புரெவி புயல் இன்று (டிசம்பர் 2) மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ராமநாதபுரம்-கன்னியாகுமரி அருகே நாளை இரவு அல்லது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Cyclone Warning for S TN & S Kerala coasts:Burevi over SW BoB to cross Sri Lanka coast on 2nd evening/night. To emerge into Gulf of Mannar on 3rd .To cross S TN coast between Pamban and Kanniyakumari during 3rd night and 4th early morning as CS. pic.twitter.com/apLgiOkpZ6

    — India Meteorological Department (@Indiametdept) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால் தமிழ்நாட்டின் ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிசம்பர் 5ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு, மேற்கு இலங்கை கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புரெவி புயல்: தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.