ETV Bharat / state

'23 ஆண்டுகள், நாள்தோறும் 40 கி.மீ. சைக்கிள் பயணம்' - 51 வயது காவலரின் கதை - சென்னை சைக்கிள் சரவணன்

சென்னை: 23 ஆண்டுகளாக நாள்தோறும் 40 கி.மீ. சைக்கிளில் சென்று உழைக்கும் 51 வயது 'காவலர் சைக்கிள் சரவணனின் சிறப்பு செய்தி தொகுப்பு...

cycle-saravanan-special-story
cycle-saravanan-special-story
author img

By

Published : Jul 10, 2020, 6:37 AM IST

Updated : Jul 10, 2020, 9:12 PM IST

வாகனங்கள் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. 'பள்ளிக்கூடத்துக்கே பைக்கிருந்தால் தான் போவேன்' என்று சொல்லும் பிள்ளைகள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம். வாங்கிய சில மாதங்களில் வாகனம் பழசாகிவிட்டது என அதை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் பணக்காரர்களுக்கும், இருசக்கர வாகனம் வாங்க பல ஆண்டுகளாக சிறுகச்சிறுக பணம் சேர்த்து இளைமையை தொலைக்கும் ஏழைகளுக்கு மத்தியில் ஒருவர் சைக்கிளே போதும் என வாழ்ந்துவருகிறார் காவலர் சரவணன்.

சென்னை புனித தோமையார் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் அவர் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துவருகிறார். காவலராக பணியமர்ந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. வயதும் 51ஐ தாண்டிவிட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அவர் நாள்தோறும் பணிக்கு சைக்கிளில்தான் சென்றுவருகிறார். காவல்பணிக்கும் சைக்கிளைதான் பயன்படுத்துகிறார். அப்படி நாள்தோறும் சென்னையில் 40 கி.மீ. வரை சைக்கிளில் சென்றுவருகிறார்.

இது குறித்து சரவணன் கூறுகையில், "1997ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தேன். சென்னையில் புளியந்தோப்பு, செங்கல்பட்டு, புனித தோமையார் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளேன். எனக்கு அடையாளம் என் சைக்கிள்தான். சென்னையில் உள்ள அனைத்து காவலர்களுக்கும், பெரும்பாலான பொதுமக்களுக்கும் என்னை தெரியும். எங்கு போனாலும் என்னை சைக்கில் சரணன் என அழைப்பார்கள். அதில் என்னை மிகவும் பிடித்தவர்கள் சைக்கிள் ஏட்டையா! சைக்கிள் ஏட்டையா! என அழைப்பாளர்கள்.

என்னுடன் பணியில் சேர்ந்தவர்கள் இருசக்கர, நான்கு வாகனம் என வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நான் சைக்கிளிலிருந்து மாறவேயில்லை. அதனால் பலர் என்னை கிண்டல், கேலி செய்துள்ளனர். நாளடைவில் அவர்களும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து என்னை பாராட்டிவருகின்றனர். ஏனென்றால் சைக்கிள் ஓட்டுவதால் உடல்நலம் சீராகயிருக்கும், அனைத்து தசைகளும் சீராக வேலை செய்யும். இரவில் நிம்மதியாக உறங்களாம்.

நான் இருசக்கர வாகனத்திற்கு மாறியிருந்தால். அதில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல அவசியம் வந்திருக்கலாம். ஆனால் நான் சைக்கிளை பயன்படுத்துவதால் உடல்நிலை கட்டுக்குள் உள்ளது. சொல்லப்போனால் மீண்டும் எனக்கு காவல் உடற்தகுதி தேர்வு வைத்தால் எளிதில் தேர்ச்சி பெறுவேன்" என்றார் புன்னையுடன்.

மேலும் அவர் இருசக்கர, நான்கு வாகனம் வாங்கி பயன்படுத்திவிட்டு ஓய்வுப் பெற்ற பின்பு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் ஆலோசனையின்படி சைக்கிளை ஓட்டுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னையில்லை என்றார். அதையடுத்து அவர் 23 ஆண்டுகளாக சைக்கிள் ஓட்டி வருவதால் பலர் அதனை சமூக வலைதளங்களில் தெரியப்படுத்துகின்றனர். அதனால் பலரின் வாழ்த்துகள், பாராட்டுக்கள் எனக்கு கிடைக்கிறது.

சைக்கிள் சரவணனின் சிறப்பு செய்தி தொகுப்பு

அதில் குறிப்பிடத்தக்கது, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவின் பாராட்டுதான். அவர் என்னை அழைத்துப் பாராட்டி சான்றிதழும், வெகுமதியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் அவர் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட என்னை அழைத்து ஆலோசனை கேட்டார் என பெருமையுடன் கூறினார். காலத்திற்கேற்ப நாம் மாறாலாம். ஆனால் நமது உடல்நிலை மாறாது. எனவே உடல்நிலையை சீராக வைத்துகொள்ளும் மாற்றங்களை ஏற்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் தலைமை காவலர் சைக்கிள் சரவணனின் வாழ்க்கை உதாரணமான ஒன்று.

இதையும் படிங்க: 73 வயது மாற்றுத் திறனாளி... நிவாரணம் வேண்டி 60 கிமீ சைக்கிள் பயணம்!

Last Updated : Jul 10, 2020, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.