சென்னை: பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பிய பப்ஜி மதன், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கடந்த 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் - யூ-ட்யூப் முடக்கம்
இவர் மொத்தம் நான்கு யூ-ட்யூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பப்ஜி மதனின் யூ-ட்யூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்குப் பரிந்துரைக் கடிதங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அனுப்பியிருந்தனர்.
மதன் இஸ்ன்டாவில் போலீஸ் அறிவுரை
அதனடிப்படையில் முதலில் பப்ஜி மதனின் யூ-ட்யூப் சேனல் முடக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அதில், இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் வகையில் பல பதிவுகளைப் பதிவிடுகின்றனர். தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.
பப்ஜி-க்கு குட் பை
இந்நிலையில், காவல் துறையின் அறிவுரைகள், எச்சரிக்கைப் பதிவுகளைப் பார்த்து மதனின் ரசிகர்களான பப்ஜி பிரியர்கள், பலர் ஆன்லைன் விளையாட்டுக்கு குட்-பை சொல்லிவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நித்தி கைது எப்போ?
பலர் காவல் துறையினரின் பதிவுகளுக்கு ரிப்ளை செய்து வருகின்றனர். இதே போல, ரகசியத் தீவில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தாவையும் கைது செய்யாலாமே எனப் பலர் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் மூலம் காவல் துறையினர் எச்சரிக்கை!