சென்னை: கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான டிஜிட்டல் கார்டு ஒன்றை பாஜக உறுப்பினரான கருணாகரன் என்பவர் டிவிட்டரில் பரப்பி உள்ளார். அதே பதிவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவரான சி.டி நிர்மல் குமார் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
இதனிடையே, இந்த பதிவு அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருப்பதாகவும், உடனடியாக பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையிடம் பாஸ்கர் என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில், பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் பாஜக உறுப்பினர் கருணாகரன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அமைதியைக் குலைக்கும் வகையில் அச்சுறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருகிற 8ஆம் தேதி பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் கருணாகரன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை விவகாரம் - பாஜக தலைவர் கைது!