வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணியின் மகன் பிரபுவுக்கு, கல்குவாரி உரிமம் வழங்கிய விவகாரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், "பொது ஊழியர் எல்லோரும் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏலத்தில் பங்கேற்கக் கூடாது என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. சக்கரபணியின் மகன் முறைப்படி ஏலத்தில் பங்கேற்று உரிமம் பெற்றுள்ளார். திமுகவில் அதிகார மோதல் நடைபெற்றுவருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் துரைமுருகன், பொன்முடியையும் மறைமுகமாக ராஜினாமா செய்ய சொல்கிறார். ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் துரைமுருகன், பொன்முடிக்கும் பொருந்தும். திமுகவில் இருப்பவர்கள்தான் கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர். அறிக்கை என்ற பெயரில் காமெடி செய்ய வேண்டாம். திமுகவை அழிக்க உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. எந்தக் கொம்பனுக்கும் பயப்பட வேண்டிய சூழல் ஏற்படாது" என்றார்.
இதையும் படிங்க: சூரப்பா பதவியேற்ற நாள் முதல் விசாரணை நடத்தப்படும் - விசாரணை அலுவலர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்!