சென்னை: நட்பாண்டில் 190க்கும் மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரிக்கவும், 185லிருந்து அதற்கு குறைவான கட் ஆப் பெற்ற மாணவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்
2022-23 ம் ஆண்டிற்கான இளங்கலை பிஇ, பிடெக் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் ஒரு மாணவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 120 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதே போல் 190க்கும் அதிகமாக கட் ஆப் பெற்றவர்களின் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைந்துள்ளது
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 120 மாணவர்கள் அதிகமாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 198 கட் ஆப் மதிப்பெண்ணிற்கு கிடைத்த இடங்கள் 200க்கு 200 பெற்ற மாணவர்கள் 2 மதிப்பெண் அதிகரிக்கிறது. 197க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரியில் 199 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 195 .95 மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் 197 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிடைக்கும். அதே சமயம் 190 மதிப்பெண்களுக்கு மேலாக கட்-ஆப் மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது . 196 முதல் 185 க்கு கீழ் கட்-ஆப் மதிப்பெண் குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 195 கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2 கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது . 192க்கும்.மேல் ஒன்றரை கட் ஆப்.மதிப்பெண் அதிகரிக்கிறது. நடப்பாண்டு 190லிருந்து 192 வரை 1கட் ஆப்.மதிப்பெண் அதிகரிக்கிறது. நடப்பாண்டு 185 கட் ஆப் 1 மதிப்பெண் குறைகிறது . நடப்பாண்டில் 180 கட் ஆப் இந்த ஆண்டு 3 கட் ஆப் குறைகிறது. நடப்பாண்டில் 170கட் ஆப் 7 கட் ஆப் குறைகிறது. 160 கட் ஆப் நடப்பாண்டில் 12கட் ஆப் குறைகிறது. மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது என தெரிவித்தார்.
பொறியியல் மாணவர்கள் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியலில் எதிர்பாராதவைகள் வந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 கட் ஆப் பெற்றவர்கள் 132 பேர் அதிகரித்துள்ளனர். 195 கட் ஆப்பிற்கு 1300 பேர் இருந்தனர்.இந்த ஆண்டு 3023 பேர் உள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி, பிஎஸ்ஜி, தியாகராஜா போன்ற கல்லூரிகளில் கடும்போட்டி இருக்கும். இது போன்றக் கல்லூரிகளில் சேர 196 கட்ஆப் மேல் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு 192 வரையில் 4300 மாணவர்கள் என இருந்தது நடப்பாண்டில் 5800 எனவும்,190 கட்ஆப் கடந்தாண்டு 7530 என இருந்தது நடப்பாண்டில் 8 299 பேர் என உள்ளது. 188 முதல் 191 வரையில் ஒரு மதிப்பெண் அதிகரித்து வருகிறது. 185 கட்ஆப் மதிப்பெண்ணிற்கு பின்னர் தான் குறைகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூரியில் நெளிந்த புழுவினால் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பிரபல உணவகத்தில் சோதனை