சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, மதுபானங்கள், போதைப்பொருள்கள், தங்கம் ஆகியவை வழங்குவதைத் தடுக்க சுங்கத் துறை அலுவலர்கள் 'நீலக் கழுகு' (புளூ ஈகிள்) என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
15 குழுக்கள் அமைக்கப்பட்டு 50 சுங்க அலுவலர்கள் கடந்த 3ஆம் தேதிமுதல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மயிலாப்பூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையம், கண்டெய்னர் குடோன்கள், விமான சரக்கு வளாகங்கள், கிடங்குகளில் சுங்கத் துறை அலுவலர்கள் தீவிரச் சோதனை மேற்கொண்டனர்.
இதில், தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல்செய்யப்பட்டது.
மயிலாப்பூரில் வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல்செய்தனர். இதேபோல் மணலி, திருவொற்றியூர், துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் தளத்தில் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உரிய ஆவணங்களின்றி சில கண்டெய்னர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டவருகிறது.
இதைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், வெள்ளிப் பொருள்களைச் சுங்கத் துறை அலுவலர்கள் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்!