சென்னை: தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து ஏா் ஏசியா ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த ஷாகுல் அமீது (32), திருச்சியை சோ்ந்த ரஷீத் (28) ஆகிய இருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதேநேரம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சோ்ந்த அருண் பாண்டியன் (30) என்பவரையும் சந்தேகத்தில் நிறுத்தி சோதனையிட்டனா். மேலும், துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பழனிச்சாமி (38) என்பவரையும் நிறுத்தி சோதனையிட்டனா்.
இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 4 பயணிகளிடமிருந்து மொத்தம் 3.08 கிலோ தங்கப்பசை, தங்கங்கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.1.38 கோடி ஆகும். இவை அனைத்தையும் பயணிகள் நான்கு பேரும், தங்களது உள்ளாடைகள் மற்றும் காலணிகளில் மறைத்து எடுத்து வந்திருந்தனா். இதனைத்தொடர்ந்து, 4 பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Watch: இளைஞர்கள் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சி....