சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிக்ஜாம் புயல்' ஆக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனால், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், புயலானது இன்று (டிச. 5) கரையைக் கடந்தது.
புயல் காரணமாக, தலைநகர் முழுவதுமே பல இடங்களில் அதிக கனமழை பெய்து மழைநீர் தேங்கி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வீரானம் ஏரி, பூண்டி நீர் தேக்கம், ரெட் ஹில்ஸ், சோழாவரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
மேலும், சென்னைக்கு தேவையான நீரின் அளவு 13.222 டிஎம்சி ஆக இருக்கும் பட்சத்தில் தற்போது 12.163 டிஎம்சி தண்ணீர் கையிருப்பாக உள்ளதாக தமிழ்நாடு நீர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று (டிச. 5) மாலை 6 மணி நிலவரப்படி, ஏரிகளில் இருக்கும் தண்ணீரின் இருப்பு பின்வருமாறு:
ரெட் ஹில்ஸ்:
- ஆழம்: 20.32அடி/21.20 அடி
- சேமிப்பு: 3.076/3.300 டிஎம்சி
- நீர் வரத்து: 5133 கன அடி
- நீர் வெளியேற்றம்: 5689 கன அடி
சோழாவரம் ஏரி:
- ஆழம்: 18.86 அடி /18.86 அடி
- சேமிப்பு: 1.081/1.081 டிஎம்சி
- நீர் வரத்து: 3062 கன அடி
- நீர் வெளியேற்றம்: 3062 கன அடி
செம்பரம்பாக்கம் ஏரி:
- ஆழம்: 23.45 அடி /24.00 அடி
- சேமிப்பு: 3.501/3.645 டிஎம்சி
- நீர் வரத்து: 6110 கன அடி
- நீர் வெளியேற்றம்: 6110 கன அடி
வீரானம் ஏரி:
- ஆழம்: 13.65 அடி/15.60 அடி
- சேமிப்பு: 0.990/1.465 டிஎம்சி
- நீர் வரத்து: 87 கன அடி
- நீர் வெளியேற்றம்: 87 கன அடி
பூண்டி நீர்த்தேக்கம்:
- ஆழம்: 34.60 அடி/35.00 அடி
- சேமிப்பு: 3.015/3.231டிஎம்சி
- நீர் வரத்து: 14560 கன அடி
- நீர் வெளியேற்றம்: 10145 கன அடி
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக நீட்டிப்பு!