இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 22ஆம் தேதி, ஒரு நாள் மக்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் மீன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து நேற்று மாலை முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை வரை தமிழ்நாட்டில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை காலத்தில் மீன் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள துறை முதன்மை செயலர் கோபால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கில் விதி விலக்களிக்கப்பட்டுள்ள பணிகளில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை உள்ளது. எனவே, மீன் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டுமென கேட்டுகொண்டார்.
மேலும், இறால், மீன் பண்ணைகளுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மெகபூபா முப்தியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை