சென்னை: பாஜகவின் தகவல் தொழிநுட்பப் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நிர்மல்குமார். 2021ஆம் ஆண்டு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து தகவல் தொழிநுட்பப் பிரிவில் பயணித்த நிர்மல்குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகினார்.
-
என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் 🙏 pic.twitter.com/jcXAtJroid
">என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 5, 2023
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் 🙏 pic.twitter.com/jcXAtJroidஎன்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 5, 2023
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் 🙏 pic.twitter.com/jcXAtJroid
இதன்தொடர்ச்சியாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். சமீப காலமாக, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டை முன்வைத்து முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம் விலகியது பெரிதும் பேசப்பட்டது. அந்த வரிசையில், நிர்மல்குமாரும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியது குறித்து நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.
2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? உங்கள் சகோதரன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.. அண்ணாமலை பகிரங்க சவால்..