ETV Bharat / state

குழந்தை தொழிலாளர்கள் முறைக்கு எதிராக 'குழந்தை உரிமையும் நீங்களும்' அமைப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!

author img

By

Published : Jun 13, 2023, 6:53 AM IST

Updated : Jun 13, 2023, 9:44 AM IST

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து பல்வேறு தொண்டு நிறுவனங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'குழந்தை உரிமையும் நீங்களும்' அமைப்பு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியது.

குழந்தைகளுக்கு உதவ வேண்டாம்.. குழந்தை உரிமையும் நீங்களும் அமைப்பின் முன்னெடுப்பு

சென்னை: குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று (ஜூன் 12) கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், 'குழந்தை உரிமைகளும் நீங்களும்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 6 தொண்டு நிறுவனங்களுடன் ஒரு வார பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 'ஒரு மனதான விருப்பமும், அதை அடையும் உறுதியும் இருக்கும் பொழுது மாற்றத்தைக் கொண்டு வர முடியும்' என்ற கூற்றின்படி இந்த பிரச்சாரமும் , நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அமைப்பு சென்னை, சேலம், தருமபுரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்குடன் இந்த பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

மேலும், 'குழந்தைகளுக்கு உதவ வேண்டாம் – அவர்களுக்கு வேலை கொடுத்து' என்ற முழக்கத்துடன் பல்வேறு நிகழ்வுகள் மூலமாகவும், விழிப்புணர்வு கூட்டங்கள் மூலமாகவும் இந்த பிரச்சாரம் தேசிய அளவில் நடைபெற்று வருவதாக அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பள்ளிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், கிராமங்களில் பேரணிகளை நடத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் வேலைக்குப் பதிலாக பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, இந்த ஒரு வார கால பிரச்சாரம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து குழந்தை உரிமைகளும் நீங்களும் (CRY) அமைப்பின் தென் பிராந்திய இயக்குநர் ஜான் ராபர்ட்ஸ் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏற்பட்டிருந்தாலும், இந்த முன்னேற்றத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லும் விதமாக கரோனா பெருந்தொற்று பொருளாதாரத்தை சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், குடும்பங்களை வறுமையில் ஆழ்த்தியுள்ளது.

இதன் விளைவாக, ஏராளமான குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர் முறைக்குத் தள்ளப்பட்டனர். இந்த உலக குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தில், நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான, வளர்ப்பு மற்றும் ஆதரவான சூழலுக்கான உரிமையை அனுபவிப்பதை உறுதி செய்வதாக அனைவரும் உறுதிமொழி எடுப்போம்” என்றார்.

முன்னதாக, இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களில் 76 லட்சத்து 79 ஆயிரத்து 35 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 42 லட்சத்து 6 ஆயிரத்து 708 பேர் ஆண் குழந்தைகள் மற்றும் 34 லட்சத்து 72 ஆயிரத்து 327 பேர் பெண் குழந்தைகள் ஆவர்.

இதன்படி, வணிகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட வளரிளம் குழந்தைகள் 1 கோடியே 61 லட்சத்து 448 பேர் உள்ளனர். அதில் 1 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரத்து 659 ஆண் குழந்தைகளும், 59 லட்சத்து 59 ஆயிரத்து 789 பேர் பெண் குழந்தைகளும் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: UPSC prelims result: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி!

Last Updated : Jun 13, 2023, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.