ETV Bharat / state

சாலையைக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த கொடூரம்! - தாம்பரம் அருகே வாகன விபத்து

சென்னை : சாலையைக் கடக்க முயன்ற தனியார் நிறுவனத்தின் தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாகன விபத்து
வாகன விபத்து
author img

By

Published : Aug 20, 2020, 1:53 PM IST

சென்னை கிழக்கு தாம்பரம் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (47). இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று இரவு (ஆக.19) வேலைக்குச் சென்றுவிட்டு, நிறுவனத்தின் வாகனத்தில் கிழக்கு தாம்பரம் வந்து இறங்கியுள்ளார். பின் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து சேலையூர் செல்லக்கூடிய சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜசேகரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின் இதுகுறித்து அங்கிருந்த வாகன ஓட்டிகள் சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் வந்த காவல் துறையினர் ராஜசேகரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இருவரில் ஒருவர் பிடிப்பட்ட நிலையில் மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பின் பிடிபட்ட நபரை காவல் துறையினர் விசாரணை செய்ததோடு, தப்பியோடிய வரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.