தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று(ஜன.21) மட்டும் சுமார் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாளை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய கடைகள் மட்டும் நாளை இயங்கும்.மற்ற கடைகள் இயங்காது. இதையடுத்து மக்கள் நாளை இறைச்சி வாங்க முடியாது என்பதால் இன்று இறைச்சி கடைகளில் குவிந்துள்ளனர்.
குறிப்பாக, சென்னை காசிமேடு பகுதியில் மீன் சந்தையில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுமட்டும்மில்லாமல் இறைச்சி மற்றும் மீன்களின் விலையும் சென்னையில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இன்றைய நிலவரபடி , சிக்கன் கிலோ 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மட்டன் கிலோ 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் விலைகளை பொறுத்த வரையிலும் சங்கரா மீன் கிலோ 600 ரூபாய்கும், வஞ்சிரம் மீன் கிலோ 1200 ரூபாய்கும், டைகர் இறால் கிலோ 1500 ரூபாய்கும், நண்டு கிலோ 500 ரூபாய்கும் விற்கப்படுகிறது. சில்லறை வியாபாரத்தில் 10 அல்லது 20 ரூபாய் அதிகமாக விற்கப்படும்.
இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமாக பலர் முககவசம் அணியாமலும், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காமலும் இருப்பதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா மூன்றாவது அலையில் பரிசோதனைகள் குறைப்பு