புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் கரையை கடந்த நிலையில் எண்ணூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் புயலின்போது கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.
நடுக்கடலில் உள்ள குப்பை உள்ளிட்ட பொருள்களை அலையின் சீற்றத்தால் கரை ஒதுங்குவது வழக்கம். இந்நிலையில், காசிமேடு கடற்கரை பகுதியில் புயல் ஓய்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு தற்போது கடல் சகஜமான நிலைக்கு மாறி, சீற்றம் குறைந்து காணப்படுகிறது. இதனால் காசிமேடு அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் கப்பல்களில் இருந்து கொட்டப்படும் நிலக்கரித் துகள்கள் அனைத்தும் கரையோரம் அடித்து வரப்பட்டு கற்கள் இடையே தேங்கியுள்ளன.
ஒரு சில பகுதிகளில் சிப்பிகள், கிளிஞ்சல்கள் கடலில் மிதந்து வருவதால் அப்பகுதி மக்கள் அனைவரும் சிறிய வடிவிலான வலைகளை வைத்தும் பாத்திரங்களில் பிடித்தும் வருகின்றனர். மேலும் சிற்பிகள் கிளிஞ்சல்கள் உயிருடன் இருப்பதால் அதனை புகைப்படம் எடுத்து அப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்தோடு கடற்கரைக்குச் சென்று நிலக்கரியை சேகரித்து வருகின்றனர். இதனால் காசிமேடு பகுதியில் புயலுக்குப் பின் களைகட்டியுள்ளது.