ETV Bharat / state

"ஆளுநருக்கு வாய்க்கொழுப்பு; செல்லும் இடமெல்லாம் கறுப்பு கொடி காட்டுங்கள்" - முத்தரசன் சரவெடி - ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கார்ல் மார்க்ஸ் குறித்த கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக்கேட்க வேண்டும் என, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Feb 24, 2023, 3:03 PM IST

Updated : Feb 25, 2023, 6:51 PM IST

ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: ஆளுநர் மாளிகையில் அண்மையில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்திய கொள்கைகள் மேற்கத்திய சிந்தனையைத் தொடர்ந்ததாக இருந்தது. டார்வின் கோட்பாடு, மார்க்ஸின் சித்தாந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்து போட்டது" என்றார். ஆளுநரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையின் முன் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரை எதிர்த்து முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநருக்கு தெரியவில்லை எனக் கூறி கைத்தட்டி சிரித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "ஆளுநர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். வாய் கொழுப்புடன் ஆளுநர் பேசும் பேச்சை அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. இந்தியா பின்பற்றி வரும் மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிய ஆளுநர், தற்போது மாமேதை கார்ல் மார்க்ஸூக்கு எதிராகப் பேசியுள்ளார்.

வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் ஆளுநர் எங்கும் நடமாட முடியாது. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும். அதனால் ஏற்படும் சட்டம்-ஒழுங்குக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் உடனடியாக வெளியேற வேண்டும்.

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளியேறாவிட்டால், 10,000 பேரை திரட்டி ஆளுநர் மாளிகையை சுற்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்கத்தில் ரூ.61.58 லட்சம் மோசடி - கோவையில் இருவர் கைது!

Last Updated : Feb 25, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.