ETV Bharat / state

பொது விநியோக திட்ட பொருட்களை கடத்திய 14,576 பேர் கைது

தமிழ்நாட்டில் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்தியதாக 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

பொது விநியோக திட்ட அரிசி மக்களுக்கு தடையின்றி கிடைக்கும்

author img

By

Published : Dec 31, 2022, 11:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 7.5.2021 முதல் 29.12.2022 வரை பொது வினியோக திட்ட பொருட்களை கடத்தியதாக 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டு, 13,52,49,711 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 07.05.2021 முதல் 29.12.2022 வரையிலான காலக்கட்டத்தில் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்கள் கடத்தியதாக மொத்தம் 14,514 வழக்குகள் குடிமை வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினால் பதிவு செய்யப்பட்டு, 1,03,056 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் 32,300 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1,969 சிலிண்டர்களும், 6,27,400 லிட்டர் கலப்பட டீசல் உள்பட கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் ரூ.13,52,49,711 மதிப்பிலான பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு தொடர்புடைய 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 3,038 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 134 நபர்கள் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல 11.10.2019 முதல் 06.05.2021 காலக்கட்டத்தில் 9,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51,738 குவிண்டால் அரிசி மற்றும் 21,343 லிட்டர் மண்ணெண்ணை, 818 சிலிண்டர், 191902 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 6,76,32,338 ரூபாய் எனவும் இந்த வழக்குகளில் தொடர்புடைய 8,957 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 1779 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 68 நபர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.