ETV Bharat / state

'திருமாவின் வெற்றியை தடுக்கவே பொன்பரப்பி கலவரம்' - பின்னணியை வெளியிட்ட சிபிஎம்! - பாமக

சென்னை: "பொன்பரப்பி வன்முறை அரசியல் ஆதயத்திற்காக பாமக கட்சி இந்து முன்னனி உதவியுடன் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது" என்று, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்
author img

By

Published : May 18, 2019, 5:36 PM IST

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு பொன்பரப்பி வன்முறை தொடர்பாக கள ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தேர்தலை முன்னிட்டு பொன்பரப்பி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு சார்பில் அங்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆய்வு நடத்தினோம்.

இதில் பொன்பரப்பி வன்முறை அரசியல் ஆதயத்திற்காக பாமக கட்சி இந்து முன்னணி உதவியுடன் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கத்தமான தாக்குதல் இது. பாமக தங்கள் சாதியைப் பயன்படுத்தி திருமாவளவன் வெற்றி பெறக் கூடாது, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு உரிமையை பறிப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்தக் கலவர சம்பவத்திற்கு இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரனும் உடந்தை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதை விட இங்கு திருமாவளவன் தோல்வியடைய வேண்டும் என்றே பாமக தாக்குதலை நடத்தியுள்ளது. அரசியல் வெற்றி, தோல்விக்கு சாதியை பயன்படுத்தி இதுபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிப்பது ஒரு ஜனநாயக படுகொலை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது' என்று அவர் தெரிவித்தார்.

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு பொன்பரிப்பி வன்முறை தொடர்பாக கள ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலை ஒட்டி பொன்பரிப்பி கிராமத்தில் தலீத் மக்கள் மீதான நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு அங்கு உள்ள அனைத்து தரப்பு மக்களிடம் ஆய்வு நடத்தினோம்.

அந்த ஆய்வின் படி பொன்பரிப்பி வன்முறை அரசியல் ஆதயத்திற்காக பாமக கட்சி இந்து முன்னனி உதவியுடன் திட்டமிட்டு தலீத் மக்கள் மீது நடத்தப்பட்ட மூர்கத்தமான தாக்குதல் ஆகும். 

பாமக தங்கள் சாதியை பயன்படுத்தி இந்த தேர்தலில் தலீத் மக்கள் வாக்கு அளிக்க கூடாது என நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதற்கு இந்து முன்னணி நிர்வாகி ராஜசேகரன் என்பவர் மிக முக்கியமான பங்கினை ஆற்றியிருக்கிரார் என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற கூடாது என தலீத் மக்களின் வாக்கு உரிமையை பார்ப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். 

விசாரணையில் இரு தரப்பினரையும் ஒரே மாறி பார்ப்பது நேர்மையான முரனான விசாரனை ஆகும். இன்றும் அங்கு உள்ள தலீத் மக்கள் கூலி தொழிலாளிகள். இந்த பதட்டமான சூழ்நிலையில் அங்கு உள்ள இதர சமுதாய மக்கள் வீட்டிற்கு சென்று வேலை பார்க்க இயலாமல் உள்ளனர். இதனால் அங்கு நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம். 

தாக்குதலில் ஈடுப்பட்ட அனைவரின் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதை விட அங்கு திருமாவளவன் தோல்வி அடைய வேண்டும் என்று பாமக அங்கு தாக்குதலை நடத்தியுள்ளது. அரசியல் வெற்றி, தோல்விக்கு சாதியை பயன்படுத்தி இது போல் தலீத் மக்களின் வாக்கு உரிமையை பரிக்க முயற்சிப்பது ஒரு ஜனநாயக படுகொலை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

பிரதமர் மோடி தான் பிரதமர் பதிவியில் இருந்து விடை பெற போகிறோம் என்று தான் பத்திரிகையாளர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நீக்க நேற்று சந்தித்திருப்பார் என நான் நினைக்கிறேன். 

பன்னீர்செல்வம் மகன் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு எம்.பி என்று பதிவிட்டு கல்வெட்டு பதித்திருப்பது ஒன்று போதுன் அவரை தகுதி நீக்கம் செய்ய. ஆனால் தேர்தல் ஆணையம் இதை எப்படி பார்கின்றது என தெரியவில்லை. பொன்பரிப்பியில் மறு வாக்கு பதிவு கேட்கின்றோம் அங்கு வைக்காமல் கேட்காத இடத்தில் எல்லாம் மறு வாக்கு பதிவு நடத்தி வருகின்றனர். இது அனைத்தும் மோசடி. இதற்கு தேர்தல் ஆணையமும் துனை போகின்றது. 

தேர்தல் ஆணையம் மேல் உள்ள நம்பிக்கையில்தான் மோடி வெற்றி பெற்றுவிடுவார் என உள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.