உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸில் மணிஷா என்னும் 19 வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மோடி அரசின் வலதுகரமான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக உள்ள உ.பி.யில் 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிற கொடுமை தொடர்கிறது.
ஆண்டுக்கு 2 லட்சம் பெண்கள் அங்கு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ராமர் ஆட்சி என்று கூறிக்கொண்டே, பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர்.
செப்டம்பர் 14ஆம் தேதி தேதி மணிஷா என்ற இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்றுள்ளனர். அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் உடலை எரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு, காவலர்கள் உடலை எரித்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை என்றால் எதற்காக அவசரஅவசரமாக நள்ளிரவில் கொண்டு சென்று உடலை எரிக்க வேண்டும்? மறு உடற்கூறாய்வு செய்யக்கூடாது, உடல் சாட்சியம் இருக்கக்கூடாது என்பதற்காவே எரித்துள்ளனர்.
பாலியல் வல்லுறவு போன்ற வழக்கில் உடலை எரிக்கக்கூடாது, புதைக்க வேண்டும் என்று பல நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் போது, உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்தநாளே அடுத்தடுத்து பல இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு பெண்கள் மீது உண்மையான அக்கரை இருந்தால், முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தை பதவி விலக செய்ய வேண்டும். யோகி ஆதித்தியநாத்தை பதவியிலிருந்து விரட்டும் வரை நாடு தழுவிய இந்த போராட்டம் தொடரும்.
இத்தகைய பெருங்கொடுமை நிகழ்ந்துள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற, துயரத்தில் பங்கெடுக்க, உதவிகள் செய்ய தலைவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
அகில இந்திய தலைவர்களை கீழே தள்ளி அம்மாநில காவல்துறை அராஜகம் புரிந்துள்ளது. பாலியல் குற்றவாளியை கைது செய்ய யோக்கியதை இல்லாத முதலமைச்சர், ஆறுதல் தெரிவிக்க செல்கிறவர்களை தடுத்து வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
உ.பி. இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் - உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.