ETV Bharat / state

‘செக்குமாட்டு சுற்றுப் பாதை’ - ஆளுநர் உரை மீது முத்தரசன் காட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதை போல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்லும் ஆளுநர் உரை -முத்தரசன் குற்றச்சாட்டு!
செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்லும் ஆளுநர் உரை -முத்தரசன் குற்றச்சாட்டு!
author img

By

Published : Jan 6, 2020, 7:43 PM IST

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காலை 10 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். மேலும், தனது உரையைத் தொடர்ந்து பின்னர் அனைத்துத் துறைகளின் மீதான விவாதங்களைத் தொடரலாம் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆளுநர் உரை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர், தனது உரையைத் தொடங்கும் முன்பு எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவித்த கருத்துகளை காது கொடுத்துக் கேட்க மறுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கடன் அளவு உச்சம் தொட்டது, வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஆளுநர் கவலைப்படவில்லை.

மத்திய அரசின் நிதிப் பகிர்வு முறையால் தமிழ்நாடு சந்தித்து வரும் நிதிப் பேரிழப்பை ஆளுநர் உரை குறைத்து மதிப்பிடுகிறது. மாநில உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரத்த குரல் எங்கும் ஒலிக்கவில்லை. மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்தும் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி துணை போவது ஏன் என்பதை ஆளுநர் உரை விளக்கவில்லை.

அதுமட்டுமின்றி நீட் விவகாரம், உள்ளாட்சி வார்டு வரையறை உள்ளிட்டவை குறித்தும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை செக்குமாட்டு உரை போன்று இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாராம்சங்கள்

Intro:Body:

செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்லும் ஆளுநர் உரை

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டு (2020) கூட்டத் தொடரை தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றிள்ளார். ஆளுநர், தனது உரையைத் தொடங்கும் முன்பு எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவித்த கருத்துக்களை காது கொடுத்து கேட்க மறுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கடன் அளவு உச்சம் தொட்டுள்ள நிலை குறித்து ஆளுநர் உரை கவலைப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையில்லாதத் திண்டாட்டத்தை போக்க எந்தத் திட்டமும் இல்லை. சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஆகரப்படுத்தி 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என ஆளுநர் கூறியிருப்பது ‘தாகத்தால் உயிர் போகும் வதைக்கு ஆளாகியிருப்போருக்கு ‘கானல் நீரைக் காட்டி’ தாகம் தீரக் குடித்துக் கொள்ளுங்கள் என்பது போலிருக்கிறது.

மத்திய அரசின் நிதிப் பகிர்வு முறையால் தமிழ்நாடு சந்தித்து வரும் நிதிப் பேரிழப்பை ஆளுநர் உரை குறைத்து மதிப்பிடுகிறது. மாநில உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரத்த குரல் எங்கும் ஒலிக்கவில்லை.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சுயஉதவிக்குழுக்கள் கடன் நிதி ரூ.12,500 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நுண்நிதிநிறுவனங்களில் (விவீநீக்ஷீஷீ திவீஸீணீஸீநீமீ) கடன் பட்டு அதனை கட்ட வழியின்றி அவதிப்படுவோருக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, மதச்சார்பற்ற பண்புகளை நிராகரிக்கிற, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை கைவிடுகிற, மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்தும் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி துணை போவது ஏன் என்பதை ஆளுநர் உரை விளக்கவில்லை.

அரசின் சேவையை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல புதிய மாவட்டங்கள் அமைந்திருப்பதை பெருமைப்படக் கூறும் ஆளுநர் உரை, அந்த 9 மாவட்ட மக்களின் உள்ளாட்சி ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருப்பதை மூடி மறைத்து விட்டது.

‘நீட்’ நுழைவுத் தேர்வு முறையில் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்தரப்பில் தொடர்ச்சியாக வலுவாக எடுத்துக் கூறியபோதும் காது கொடுத்துக் கேட்காத அரசு, அரியலூர் அனிதா தொடங்கி கிராமப் பகுதி, அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வந்த நேரங்களில் உணராத அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியிருப்பது உரிமைகளை பாதுகாக்கவா? ஊரை ஏமாற்றவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாவட்டங்களிலும் உள்ளாட்சி வார்டு எல்லைகள் வரையறுப்பதில் தவறுகள் ஏற்பட்டிருப்பதை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது. உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில் இதுவரை இல்லாத முறையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பிரித்து வைத்திருப்பது மக்கள் குவிந்துள்ள பெருநகரங்களிலும், நகரங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வழியில்லை.

நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை கைவிடுவது, தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் தள்ளிவிடுவது, பாதுகாப்புத்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்ற மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஆளுநர் உரை பிரதிபலிக்கவில்லை.

சென்னை ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனத்தில் நிலவி வரும் சாதி வெறி ஆதிக்கத்தால் மாணவி பாத்திமா லத்தீப் மரணமடைந்திருப்பது ‘பாதுகாப்பாற்ற’ நிலையை வெளிப்படுத்துகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள மக்களின் உணர்வுகளை ஆளுநர் உரை பிரதிபலிக்கவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிக்கான பாதை  அமைக்கவில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தோழமைமிக்க

(இரா.முத்தரசன்)

மாநிலச் செயலாளர்

Attachments area

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.