தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. சென்னையில் கரோனாவால் நேற்றிரவு (ஜூலை 7) முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்தனர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!