சென்னை: தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் புதியதாக 1,301 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 187 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கும், பிற மாவட்டங்களில் 11 பேர் என 21 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிக்கப்பட்ட 74 வயது முதியவர் கோயம்புத்தூர் கேஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பாதிப்பின்போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளை தீவிரபடுத்த வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.