கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதால் 45 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது. அதனடிப்படையில் மாநிலத்தில் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் கரோனா தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சிறைகளில் 45 வயது நிரம்பிய தண்டனைக் கைதிகளில் விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என சிறைத் துறை அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மத்திய சிறையில் 13 தண்டனை கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதைப் போல மத்திய சிறை, வேலூர், பாளையங்கோட்டை, பெண்கள் தனிச்சிறை போன்ற சிறைகளில் உள்ள 82 தண்டனை கைதிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது தவிர 647 சிறைக்கைதிகள் கரோனா தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறைத் துறை டிஜிபி சுனில் குமார் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:யார் யார் எல்லாம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? - விளக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி