ETV Bharat / state

நினைவிடத் திறப்பு விழாவில் கரோனா விதிமீறல்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - covid norms violation at jayalalitha memorial ceremony

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் கரோனா விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Mar 11, 2021, 1:14 PM IST

கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுதல்உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டவர்கள், இந்தக் கட்டுப்பாடுகளை மீறியதாகக்கூறி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு இன்று (மார்ச்.11) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நினைவிடத் திறப்பு விழாவுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் எப்படி அனுமதித்தனர் எனக் கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து ஆறு வாரங்களில் விளக்கமளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆதார் விவரங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க கோரும் வழக்கை மறுத்த உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.