ETV Bharat / state

மருத்துவக் கருவிகளுக்கான முன்னேற்பாடு செய்ய மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை! - covid 19

சென்னை: கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பததை அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

covid 19  threat: Vaiko  request to central government HM Harshabardhan for medical equipment
கரோனா அச்சுறுத்தல் : மருத்துவக் கருவிகளுக்கான முன்னேற்பாடு செய்ய மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை!
author img

By

Published : Mar 20, 2020, 9:34 PM IST

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வைகோ இன்று கோரிக்கை மனு அளித்தார். அதில், “கோவிட்-19 நோய்த்தொற்று பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிர் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டர்), அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகள் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோலப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரித்தானிய முடியரசு ஒன்றியம் ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை உருவாக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

எனவே, நமது நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட, போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பது குறித்து, அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.

covid 19  threat: Vaiko  request to central government HM Harshabardhan for medical equipment
கரோனா அச்சுறுத்தல் : மருத்துவக் கருவிகளுக்கான முன்னேற்பாடு செய்ய மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

குறுகிய காலத்திற்குள், மருத்துவக் கருவிகளை, எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் உற்று நோக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கும்பகோணம் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.