சென்னை: இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் நேற்று (ஜூன்.10) 15 ஆயிரத்து 759 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரத்து 243 பேர் குணமடைந்துள்ளனர். 378 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 838 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 20 ஆயிரத்து 889ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 906ஆக உயர்ந்துள்ளது.
தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள்
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 94ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 842 என குறைந்துள்ளது. கோயம்புத்தூரில் மேலும் புதிதாக இரண்டாயிரத்து 56 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 365 பேரும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 916 பேரும், திருப்பூரில் 853 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,23,123
- கோயம்புத்தூர் -1,99,660
- செங்கல்பட்டு - 1,50,061
- திருவள்ளூர் - 1,06,982
- சேலம் - 77,583
- திருப்பூர் - 72,899
- ஈரோடு - 73,612
- மதுரை - 69,597
- காஞ்சிபுரம்- 67,573
- திருச்சிராப்பள்ளி- 64,220
- தஞ்சாவூர் - 56,588
- கன்னியாகுமரி- 55,527
- கடலூர் - 54,210
- தூத்துக்குடி- 51,767
- திருநெல்வேலி - 46,227
- திருவண்ணாமலை- 45,600
- வேலூர் - 45,112
- விருதுநகர் - 42,151
- தேனி - 40,323
- விழுப்புரம் -39,665
- நாமக்கல்- 39,352
- ராணிப்பேட்டை- 38,146
- கிருஷ்ணகிரி - 36,620
- நாகப்பட்டினம் - 34,951
- திருவாரூர்- 34,527
- திண்டுக்கல்- 29,962
- புதுக்கோட்டை - 25,349
- திருப்பத்தூர் - 25,910
- தென்காசி- 25,171
- நீலகிரி - 24,721
- கள்ளக்குறிச்சி- 24,353
- தருமபுரி - 21,966
- கரூர் -20,311
- ராமநாதபுரம் - 18,565
- சிவகங்கை-16,046
- அரியலூர் - 13,430
- பெரம்பலூர் -10,230
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,004
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,075
- ரயில் மூலம் வந்தவர்கள் 428” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.