சென்னை: கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பாக இன்று (அக்.23) காலை வெடித்துச் சிதறிய கார் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் மேலும் பாதுகாப்புகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் எதிரொலியாக, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிரமாகக் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு ஏற்கனவே 18,000 போலீசார் சென்னை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் வழிபாட்டுத் தளங்கள் அருகே ரோந்து வாகன கண்காணிப்பினை தீவிரப்படுத்தவும், சந்தேகப்படும் படியான செயல்கள் எதுவும் நடைபெறுகிறதா? எனத் தீவிரமாகக் கண்காணிக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய முக்கிய ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள் தவிர ரயில் நிலைய வளாகத்தில் இருக்கக்கூடிய வாகனங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கார் விபத்து குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் - டிஜிபி சைலேந்திரபாபு