ETV Bharat / state

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும்: நீதிமன்றம் கேள்வி?

author img

By

Published : Feb 18, 2021, 10:55 PM IST

சென்னை: தனது கடன்தொகையை நடிகர் ரஜினி திருப்பித்தருவார் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றம் கேள்வி?
நீதிமன்றம் கேள்வி?

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இந்த தொகையை தான் தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்திற்கு உத்தரவிடக்கோரி முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பெயரை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டதால், வழக்கைத்தொடர்ந்து நடத்த, அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.18) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என கஸ்தூரி ராஜா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பணத்தை திருப்பித்தருவது தொடர்பாக கஸ்தூரி ராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும் என கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லாவிட்டால் வழக்கை விசாரித்து தவறு செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பரப்புரைகளில் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு குறித்து பேச கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.