ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு; உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு விசாரிப்பதாகக் கூறி வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 4:50 PM IST

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதச் சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது.

செந்தில் பாலாஜியை விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் உள்ளவரை சட்டவிரோதக் காவலில் இருப்பதாக கருத முடியாது என்பதால் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல, ஆனால் அவர்கள் ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்படவில்லை, விசாரணைக்கு தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.

குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தான் நிரபராதி என நிரூபிக்க சட்டரீதியான உரிமை உண்டு. விசாரணையை நடக்கவிடாமல் செய்ய உரிமை இல்லை. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான். அவரை காவலில் எடுப்பது அவசியம். ஆனால், தான் குற்றம்செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவலில் இருந்த நாட்களாக கருத முடியாது. அவரது சிகிச்சைக்குப் பிறகு அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை செய்யலாம். கைதுக்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூற முடியாது.

கைதுக்கான காரணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றாகத் தெரியும். காலை முதல் அவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இருந்து சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்றக் காவலில் வைத்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

கைதுக்கான காரணங்கள் சரி என்று கருதிதான் அவரது ஜாமீன் மனு, அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்பொழுது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது சரியானது அல்ல. நீதிபதி பரதசக்ரவர்த்தியின் தீர்ப்புடன் ஒத்துப்போவதால், இறுதி விசாரணைக்காக மீண்டும் பழைய அமர்வே வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

நீதிபதி கார்த்திகேயனின் பரிந்துரையை ஏற்று வழக்கு மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வில் இறுதி விசாரணைக்காக வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், காவல் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதன் உத்தரவிற்குப் பிறகு வழக்கை விசாரித்தால் சரியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்ற தனது தீர்ப்பில் எந்த மாற்றமும், கருத்தும் கூற விரும்பவில்லை. நீதிபதி பரதச் சக்ரவர்த்தி விரும்பினால் தொடர்ந்து வழக்கை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், எல்லா வழக்குகளுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து விட்டதால், உயர் நீதிமன்றத்தில் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பிலும் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க உதவுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.